×

காங். கூட்டணி கட்சிகள் இன்று முற்றுகை போராட்டம்: புதுவை கவர்னர் மாளிகை முன் மத்திய படையினர் குவிப்பு: பாரதி பூங்கா காலவரையின்றி மூடல்

புதுச்சேரி: புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து ஆளுங்கட்சியான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (8ம்தேதி) கவர்னர் மாளிகையை முதல்வர் நாராயணசாமி தலைமையில் முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இதற்கு போட்டியாக தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாததை கண்டித்து முதல்வர் நாராயணசாமி வீட்டை முற்றுகையிடப்போவதாக பாஜக அறிவித்தது. இதன் காரணமாக கவர்னர் மாளிகை, சட்டசபை செயலகம், அரசு மருத்துவமனையை சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்புக்காக மத்திய படை வீரர்களை புதுச்சேரி காவல்துறை தலைமை வரவழைத்தது.இதையடுத்து மத்திய பாதுகாப்பு படை மற்றும் சிஐஎஸ்எப் பிரிவைச் சேர்ந்த 3 கம்பெனி 350 வீரர்கள் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரிக்கு வந்தனர். அன்று இரவு முதல் ராஜ்நிவாஸ் மற்றும் பாரதி பூங்கா, சட்டசபை செயலகத்தை சுற்றிலும் தொடர்ந்து பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் காவல் துறையுடன் இணைந்து கவர்னர் மாளிகைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கிணங்க பாரதி பூங்கா நேற்று முதல் மறுஉத்தரவு வரும்வரை மூடப்பட்டுள்ளது. தடையை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டம் பாயும் என்று கலெக்டர் பூர்வா கார்க்கும் எச்சரித்துள்ளார்….

The post காங். கூட்டணி கட்சிகள் இன்று முற்றுகை போராட்டம்: புதுவை கவர்னர் மாளிகை முன் மத்திய படையினர் குவிப்பு: பாரதி பூங்கா காலவரையின்றி மூடல் appeared first on Dinakaran.

Tags : Kong ,Puduwa Governor's House ,Bharati Park ,Puducherry ,Governor ,Kiranbedi ,Congress ,Governor's House ,Cong. Coalition ,Puduwai Governor's House ,Bharathi Park ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...