×

நீங்க என்ன கடவுளா? இல்ல, சூப்பர்மேனா? மோடியை விளாசிய மம்தா

கானகுல்: ‘மேற்கு வங்கத் தேர்தலில் பாஜ வெல்லும் என்று சொல்வதற்கு நீங்கள் என்ன கடவுளா?’ என்று பிரதமர் மோடியிடம் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜ ேவட்பாள்களை ஆதரித்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘‘மேற்கு வங்கத்தில் பாஜ.வின் வெற்றி உறுதியாகி விட்டது. பாஜ அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நிச்சயம் மீண்டும் இங்கே வருவேன்,’ என்றார். ஹூக்ளியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த இக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை நேரடியாகவே விமர்சித்தார். மம்தா பேசுகையில், ‘‘மேற்கு வங்க சடடப்பேரவை தேர்தலில், இன்னும் 6 கட்டத் தேர்தல்கள் பாக்கி இருக்கின்றன. ஆனால், அதற்குள் பதவியேற்பு விழா வரை பிரதமர் பேசுகிறார். உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நாளை நடப்பதைப் பற்றி இத்தனை திட்டவட்டமாகக் கூற நீங்கள் என்ன சூப்பர் மேனா? இல்லை, கடவுளா?’ என்று கேள்வி கேட்டு துளைத்தார். அவர் மேலும் பேசுகையில், ‘‘சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக பாஜ ஒருவருக்கு பணம் கொடுத்து களத்தில் இறக்கி விட்டுள்ளது’’ என்று இந்திய மதசார்பற்ற முன்னணியின் தலைவர் அப்பாஸ் சித்திக்கையும் தனது பேச்சில் மறைமுகமாக சாடினார்.* முகாந்திரம் இல்லைமேற்கு வங்கத்தில் கடந்த 1ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. அப்போது, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியின் வாக்குச்சாவடிகளுக்கு பெரிய படையுடன் சென்ற மம்தா, ‘வாக்களிக்க வருகிறவர்களை பாஜ.வினர் தடுக்கின்றனர். வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயல்கின்றனர்,’ என அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளிடம் குற்றம்சாட்டினார். மேலும், பாஜ.வினர் அராஜகம் செய்வதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் மனு கொடுத்தார், இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், ‘முதல்வர் மம்தா பானர்ஜியின் புகார் ஆதாரமற்றது. எனவே, அது பற்றி விசாரிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை’ என்று நேற்று கடிதம் எழுதியுள்ளது….

The post நீங்க என்ன கடவுளா? இல்ல, சூப்பர்மேனா? மோடியை விளாசிய மம்தா appeared first on Dinakaran.

Tags : Superman ,Mamata ,Modi ,Kanakul ,BJP ,West ,Bengal elections ,
× RELATED மளிகை கடையின் ஷட்டரை உடைத்து திருட்டு...