×

கோயம்பேட்டில் கூடுதல் கட்டணத்தால் செய்வதறியாது போராட்டம் நடத்திய பயணிகள் மீது போலீசார் திடீர் தடியடி

கோயம்பேடு: கூடுதல் கட்டணம் குறித்து யாரிடம் புகார் அளிப்பது? என கேட்டதற்கு தடியடி நடத்துகிறார்கள் என பயணிகள் தெரிவித்தனர். மேலும் 1 அல்லது 2 மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வருகிறது எனினும்; காலையில் சென்று எப்படி வாக்களிப்பது ? என பயணிகள் கேள்வி எழுப்பினர். போலீசார் துரத்தி அடித்ததில் பயணிகளில் பலருக்கு காயம் என தகவல் தெரிவித்தனர். கூடுதல் கட்டணப் புகாரில் நடவடிக்கை இல்லை என பயணிகள் புகார் அளித்தனர். இந்நிலையில் உரிய அளவில் பேருந்துகள் இல்லாததால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியுள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளுக்கு போதுமான பேருந்து வசதிகள் செய்து தரவில்லை என பயணிகள் புகார் அளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passengers ,strike ,Koyambedu , protesters ,not have , pay extra fees , Koyambedu , police , suddenly beaten,passengers
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!