×

கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை : கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாட்டில் ஜெயலலிதா பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். இதையடுத்து கோடநாடு பற்றி மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விவகாரத்தை தொடர்ந்து பேசி வருவதாக கூறி, மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

கோடநாடு விவகாரம் குறித்து பேசக்கூடாது என உத்தரவு

இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து பேச கூடாது என உத்தரவிட வேண்டும் என அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, “கோடநாடு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க ஸ்டாலின் பேசக்கூடாது” என்று நீதிபதி இளந்தரையன் உத்தரவிட்டார். தடையை மீறி பேசினால் நீதித்துறையில் தலையிடுவதாக கருதப்படும் என்று தெரிவித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappadi Palanisamy ,MK Stalin ,DMK ,Chennai High Court ,Kodanad , Kodanad, affair, Chief Minister Edappadi Palanisamy, DMK leader MK Stalin, High Court
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...