×

நிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்:  இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட நிர்பய் ஏவுகணை  கடந்த 2013ம் ஆண்டு முதல் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி நிர்பயா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்பத்தில் பல்வேறு மாறுபாடுகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட நிலையில் நேற்று பகல்  11.44 மணிக்கு  நிர்பய் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஒடிசாவின்  சந்திப்பூரில்  இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாகபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Convoy missile test winner , Conduit, missile, test, success
× RELATED ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில்...