×

என்னதான் செய்வீங்க: திருப்போரூர் பேரவை தொகுதி

* மீனவர்களுக்கு நவீன வசதிகள்: திமுக வேட்பாளர் செந்தில் என்கிற இதயவர்மன்

கானத்தூர் தொடங்கி புதுப்பட்டினம் வரை உள்ள 15க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் பயனடையும் வகையில் நெம்மேலி மற்றும் சதுரங்கப் பட்டினம் ஆகிய இரு இடங்களில் மீன்களை பதப்படுத்தி பாதுகாக்கும் குளிர்பதனக்கிடங்கு கட்டித் தரப்படும். ஆழிப்பேரலை, புயல், வெள்ளம், மழை போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களையும், கடலோரத்தில் வசிப்பவர்களையும் காப்பாற்றி பாதுகாக்கும் நோக்கில் முட்டுக்காடு, கோவளம், நெம்மேலி, மாமல்லபுரம், புதுப்பட்டினம் ஆகிய இடங்களில் பேரிடர் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.

திருக்கழுக்குன்றம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு 24 மணி நேர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். கடலோர மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கோவளம், நெம்மேலி, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் தூண்டில் வளைவு அமைக்கப்படும்.  சிறுசேரி சிப்காட் மென்பொருள் பூங்காவில் பணியாற்றும் பெண் மென்பொருள் பொறியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பூங்காவை சுற்றிலும் அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்கப்படும்.

* கிராமங்களுக்கு பஸ் வசதி: அதிமுக வேட்பாளர் எஸ்.ஆறுமுகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும். திருப்போரூரில் சார்பு நீதிமன்றம், தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு செல்ல ரோப் கார் வசதி செய்து தரப்படும். திருப்போரூர் தொகுதி முழுவதும் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். பாலாற்றில் கட்டப்படும் தடுப்பணை மூலம் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஒன்றியங்களில் அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீர் வழங்கப்படும். சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் முதல் தர பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

கிழக்கு கடற்கரை சாலையில் வாய்ப்புள்ள 3 இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும். திருக்கழுக்குன்றம் வரை மாநகரப் பேருந்து நீட்டிக்கப்படும். திருப்போரூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும். மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதிக்கு தொல்லியல் துறை தடையை விலக்கி பட்டா வழங்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி விரிவாக்கம் செய்யப்படும். திருக்கழுக்குன்றத்தில் நடைபெறும் பாரம்பரிய மிக்க வாரசந்தைக்கு தேவையான கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டு மேம்படுத்தப்படும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : assembly constituency ,Tirupoorur , What are you doing, Tiruporur, Vol
× RELATED ஆந்திர மாநிலம் தாலுவாய் பள்ளி...