×

தாகூர் சேனா தலைவருக்கு பாஜ கதவடைப்பு

காங்கிரசிலிருந்து விலகிய தாகூர் சேனா தலைவர் அல்பேஷ் தாகூர் பா.ஜ. வில் சேர மாட்டார் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறியுள்ளார்.தாகூர் சேனா தலைவர் அல்பேஷ் தாகூர் எம்எல்ஏ காங்கிரசிலிருந்து கடந்த வாரம் விலகினார். அப்போது அவர் மக்களவை தொகுதியில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டியிருந்தார்.காங்கிரசிலிருந்து விலகிய அல்பேஷ் தாகூர், பாஜவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ. முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், ‘‘ தாகூர் சேனா தலைவர் அல்பேஷ் தாகூர் பா.ஜ. வில் சேரவில்லை. இது  காங்கிரசுக்குள் நடக்கும் உள் விவகாரம்.’’ என்றார்.

2017ம் ஆண்டு அக்டோபரில் காங்கிரசில் சேர்ந்த அல்பேஷ் தாகூர், ரத்தன்பூர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராக அவர் நியமிக்கப்பட்டதோடு, பீகார் மாநில  மக்களவை தேர்தல் பொறுப்பாளராகவும் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tagore Sena ,Bhajah , Tagore ,leader ,Bhajah ,lockout
× RELATED பாஜவுக்கு செல்கிறேனா? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்