×

தண்டவாள பணி காரணமாக குண்டூர்-தெனாலி இடையே ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தண்டவாள பணி காரணமாக குண்டூர் - தெனாலி இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: குண்டூர் - தெனாலி இடையே நடைபெறும் தண்டவாள பணி காரணமாக  ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படும். அதன்படி ஐதராபாத் - சென்னை சென்ட்ரல் ரயில் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை குண்டூர், கிருஷ்ணா  கல்வாய், தெனாலி வழியாக  இயக்கப்படும். ஐதராபாத் - திருவனந்தபுரம் சபரி விரைவு ரயில் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை குண்டூர், கிருஷ்ணா கல்வாய் வழியாக  இயக்கப்படும். செங்கல்பட்டு -  காக்கிநாடா விரைவு ரயில்  21ம் தேதி முதல் 24ம் தேதி வரை கிருஷ்ணா கல்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும்.

சென்ட்ரல் - லக்னோ விரைவு ரயில் 23ம் தேதி மற்றும் 23ம் தேதி கிருஷ்ணா கல்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும். விஜயவாடா -  சென்ட்ரல் ஜன்சதாப்தி விரைவு ரயில் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை கிருஷ்ணா கல்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும். ஐதராபாத் - எர்ணாகுளம் விரைவு ரயில் 24ம் தேதி செகந்திராபாத், கசிபேட், விஜயவாடா, ெதனாலி  வழியாக இயக்கப்படும். சென்ட்ரல் - ஸ்ரீ மாதா விஷ்ணு தேவி காத்ரா அந்தமான் விரைவு ரயில் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை தெனாலி, கிருஷ்ணா கல்வாய் வழியாக இயக்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Guntur ,Denali ,rail tracks , railroad work,Guntur-Thenali , changed, Southern Railway
× RELATED ஆந்திர சட்டமன்ற தேர்தல் : தாக்கிய எம்.எல்.ஏ., பதிலுக்கு அறைந்த வாக்காளர்!