×

ரபேல் விவகாரம்.... மோடியை திருடன் என்று விமர்ச்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு நோட்டிஸ்

டெல்லி: ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று விமர்ச்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமேதி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் அளித்த பேட்டியில், ‘ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாக பிரதமர் மோடி கூறி வந்தார்.ஆனால், ரபேல் விவகாரத்தில் நாட்டின் காவலாளி திருடன் என உச்ச நீதிமன்றமே இப்போது கூறிவிட்டது’ என்று தெரிவித்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி பாஜ எம்.பி மீனாட்சி லெக்வி மனு செய்துள்ளார்.

அதில், ‘ரபேல் விவகாரத்தை மீண்டும் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது பற்றி ராகுல் தனது சொந்த கருத்தை தெரிவித்து, பிரதமர் மோடி மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் கூறியுள்ளார். இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் ராகுல் காந்தி தரப்பில் காரணம் கேட்க வேண்டியாது அவசியம் என்ற காரணத்தால் இது தொடர்பாக ஏப்ரல் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rafael ,Rahul Gandhi ,Modi , Rafael, Modi thief, Rahul Gandhi, notices
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை...