×

விவசாயம் செழிக்க வேண்டி வயல்களில் நல்லேர் பூட்டி சிறப்பு வழிபாடு

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் நல்லேர் பூட்டி சாகுபடி பணிகள் தொடங்குவது வழக்கம். இப்படி துவங்கினால் அந்தாண்டு விவசாயம் செழித்து வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த வழக்கம் பல கிராமங்களில் மறைந்து விட்டாலும், சில கிராமங்களில் இன்னும் தொடர்கின்றன. இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி தஞ்சை அருகே உள்ள டவுன்கரம்பை, வேங்கராயன்குடிகாடு, பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று காலை நல்லேர் பூட்டும் விழா நடந்தது. இதற்காக மாடுகளை நீராட்டி, பொட்டு வைத்தும், வயலில் கணபதி பூஜை, வருண பூஜை, சூரியநாராயண பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது உழவு செய்ய வேண்டிய இடத்தில் இயற்கையான உரங்களை தெளித்தும், நவதானியங்களை தூவியும், பின்னர் ஏர்கலப்பையில் மாட்டை பூட்டி விவசாயிகள் உழவு செய்தனர். இதில் விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

சித்திரை மாதம் முதல் நாளில் நிலத்தில் ஏர் பூட்டி, உழுது வைப்பது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். இந்தாண்டு முழுவதும் நல்ல விளைச்சலும், அறுவடையும் இருக்க வேண்டுமென்று இயற்கையை வேண்டுவதே இதன் நோக்கமாகும். தென்மேற்கு பருவமழை, மேட்டூர் அணை நீர் திறப்பை பொறுத்து குறுவை சாகுபடியை துவங்குவோம். இல்லாவிட்டால் ஆழ்குழாய் மூலம் சாகுபடி மேற்கொள்வோம் என்றனர். பேராவூரணி: பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி கிராமத்தில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு பொன்னேறு பூட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சங்கரமட கிளை மேலாளர்  ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவடுகுறிச்சியில் உள்ள காஞ்சி சங்கரமட கிளை நில குத்தகைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பொன்னேறு பூட்டி பூமிக்கு பூஜை செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Natheer Bhatti ,field , Agriculture, fields, worship
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால்...