×

சம்பள பாக்கியை தராததால் விமானங்களை இயக்க மறுத்து ஜெட் விமானிகள் போராட்டம்

மும்பை: சம்பளம் வழங்கப்படாததால் இன்று காலை 10 மணி முதல் விமானத்தை இயக்கப் போவதில்லை என ஜெட் ஏர்வேஸ் விமானிகள் அறிவித்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் சுமை அதிரித்து ₹7,000 கோடியை தாண்டியது. இதனால், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  சம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1ம் தேதி முதல் வேலை   நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஜெட் ஏர்வேஸ் விமானிகளும், ஊழியர்களும் கடந்த மாதம் 31ம் தேதி அறிவித்தனர். அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் டிசம்பர் மாத சம்பளம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதேநேரத்தில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான சம்பள பாக்கியை ஏப்ரல் 14ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஜெட் ஏர்வேஸ் விமானிகள், பொறியாளர்கள் மற்றும்  நிர்வாக பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் வலியுறுத்தினர். ஆனால், சம்பளம் வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து, விமானிகள் 1,100 பேர் இன்று காலை 10 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்  என உள்நாட்டு விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  விமானங்கள் ரத்து: இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், சார்க் மற்றும் ஏசியான் நாடுகளுக்கு விமானங்கள் இயக்குவதை வரும் 16ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது. சென்னையில்  இருந்து டொரான்டோ, பாரீசுக்கு இயக்கப்படும் விமானங்கள், ஆம்ஸ்டர்டாம், லண்டன், ஹீத்ரூ இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : salary, increment, flights, Jet Pilots ,Struggle
× RELATED மோடி தள்ளுபடி செய்தது விவசாயிகளின்...