×

அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வ தலைவர்கள் மோடி, அமித்ஷா...கே.பாலகிருஷ்ணன் கிண்டல்

அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வ தலைவர்கள் மோடி, அமித்ஷா தான் என திருவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  தலைமையில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வ தலைவர்கள் மோடி, அமித்ஷா தான். பதவிக்காக ஓபிஎஸ், இபிஎஸ் எதையும் செய்வார்கள். ராஜதந்திரத்தால் முதல்வர் ஆனவர் எடப்பாடி. நாங்கள்  எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை.

100 நாள் வேலை திட்டத்தை அழிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது. தமிழை தேசிய மொழியாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுப்போம். தமிழ் மீது பற்று இருப்பது போல் மோடி  நடிக்கிறார்’’ என்றார். பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். முக்கியமாக, தோல்வி பயத்தால் தான் எதிர்க்கட்சிகளை ரெய்டு மூலம் பாஜ மிரட்டுகிறது. மோடி, எடப்பாடி மீது  மக்கள் கோபத்தில் உள்ளனர். பண மதிப்பு இழப்பு படுதோல்வி அடைந்துள்ளது’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Leaders ,AIADMK Modi ,Amit Shah ,K.Balakrishnan Kundal , AIADMK, Leader,s Modi, Amit Shah,K.Balakrishnan, Kundal
× RELATED பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க...