×

2 சாமிகளையும் நம்ப வேண்டாம் புதுச்சேரியில் டிடிவி பிரசாரம்

புதுச்சேரி: புதுவை மக்களவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்மாறன், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் முருகசாமி ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று மாலை புதுச்சேரியில் 2 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது: தேசிய கட்சிகளை நம்பி புதுச்சேரி மக்கள் படும் பாட்டை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த சாமிகளை (நாராயணசாமி, ரங்கசாமி) நம்பி வீணாகாமல் புதிய மாற்றத்தை இங்கே உருவாக்க வேண்டும்.

மோடியின் பொய்யான வாக்குறுதிகளை அன்றைக்கு நம்பாத காரணத்தால் ஜெயலலிதா இருந்தவரை தமிழக மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன. எனவே புதிய மாற்றத்துக்கு அமமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்க,  அமமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இரண்டு சாமிகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : campaign ,Puducherry , 2 Samy, Thuchcheri, DTV, Propaganda
× RELATED கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம்...