×

நாடு முழுவதும் உள்ள சிறையில் 2.93 லட்சம் விசாரணை கைதிகள்: தாயுடன் வாடும் 1,942 குழந்தைகள்

புதுடெல்லி: நாட்டில் உள்ள சிறைகளில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 58 பேர் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். தாயுடன் 1,942 குழந்தைகளும் சிறையில் வாடுகின்றனர்.சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் பற்றிய 2016க்கான புள்ளி விவரத்தை  தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள விவரம் வரமாறு: கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிப்படி இந்தியாவில் உள்ள 1,400 சிறைகளில்  4 லட்சத்து 33 ஆயிரத்து 3 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், தண்டனை கைதிகளாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 683 பேரும், விசாரணைக் கைதிகளாக 2 லட்சத்து 93 ஆயிரத்து 58 பேரும், பிறவகை கைதிகளாக 3,089 பேரும் உள்ளனர். மொத்தமுள்ள கைதிகளில் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 67.7 சதவீதமாக உள்ளது.            
இது தவிர 1,649 பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் 1,942 குழந்தைகளும் சிறையில் வாடுகின்றனர். கடந்த 2014ம் ஆண்டில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 879 பேராக இருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை, கடந்த 2016ம் ஆண்டில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.

விசாரணைக் கைதிகளில் அதிகம் பேர் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 172 பேர் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 384 கைதிகள் மத்திய சிறைகளிலும், துணை சிறைகளில் 33 ஆயிரத்து 260 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக் கைதிகளில் 23.4 சதவீதம் பேர் உத்தர பிரதேசத்திலும், பீகாரில் 9.5 சதவீதம் பேரும், மகாராஷ்டிராவில் 7.7 சதவீதம் பேரும் என அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர். இது தவிர 6,370 வெளிநாட்டினரும் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டில் தண்டனைக் கைதிகளாக ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 517 பேர் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், 2016ல் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : prison inmates ,country , Across ,country, inmates, 1,942 children ,mother
× RELATED கோவை சிறை கைதிகள் 100 சதவீத தேர்ச்சி