×

பாகிஸ்தானில் குண்டுவெடித்து 20 பேர் பலி

கராச்சி:  பாகிஸ்தானின் காய்கறி மார்க்கெட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 20 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாட்டா நகரில் ஹசாரிகன்ச் பகுதியில்,  ஹசாரா சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் நேற்று பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில், கடைகள் தரைமட்டமாகின. மேலும். பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan , 20 killed,Pakistan
× RELATED சில்லி பாயின்ட்...