×

திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: உளறிக்கொட்டி சமாளித்த ராமதாஸ்

திருக்கழுக்குன்றம்: காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியிலும் திருப்போரூர் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே பிரச்சார பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், அதிமுக சார்பில் மக்களவைக்கு போட்டியிடும் மரகதம் குமரவேல், மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு எதிராக போட்டியிடும் மற்ற கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என கூறுவதற்கு பதிலாக, இவர்கள் இருவருமே டெபாசிட் இழப்பர் என்றதால் கூட்டணி கட்சியினரிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சுதாரித்துக் கொண்ட ராமதாஸ், தனது பேச்சை திருத்தி, அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பர் என கூறி பேச்சை முடித்து கிளம்பினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Ramadoss ,Thirukkulam District , AIADMK candidates ,Thirukkulam , Ramadoss
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...