×

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கல்வி, நகை கடன்கள் ரத்து: திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பிரசாரம்

சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றவுடன் மாணவர்களின் கல்வி கடன் மற்றும் ஏழை மக்களின் நகை கடன் ரத்து செய்யப்படும், என பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு நேற்று காலை காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், பெரும்புதூர் தெற்கு ஒன்றியம் பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரித்தார். மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, மாவட்ட அவை தலைவர் துரைசாமி, தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரசாரத்தின் போது டி.ஆர்.பாலு பேசியதாவது:

கல்லூரி மாணவ மாணவியர் கடன் பெற்று கல்வி கற்கின்றனர். திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றவுடன் அந்த கல்வி கடன் ரத்து செய்யப்படும். வேலை இல்லாமல் இருக்கும் ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை ஏற்பாடு செய்யப்படும். 50 லட்சம் பேருக்கு கார்பரேட் சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் வேலை ஏற்பாடு செய்யப்படும். 50 லட்சம் பெண்கள் மக்கள் நல பணியாளர்களாக நியமனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். பெண்கள் சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் வட்டி இல்லா கடன் வழங்கப்படும். 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் நகை கடன் ரத்து செய்யப்படும்.

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள், பெண்களுக்கு வேலை கிடைக்கும். பெண்களுக்கு கொடுக்கப்படும் 50 ஆயிரம் வட்டி இல்லா கடன் மூலம் அவர்கள் சிறு தொழில் தொடங்கி பயன்பெறலாம்.
எனவே இது போன்ற நல்ல திட்டங்கள் பொதுமக்களாகிய உங்களுக்கு கிடைக்க வரும் 18ம் தேதி திமுக கூட்டணி காட்சிகளுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,TR Baalu ,jewelery ,cancellation ,DMK , Education, jewelery loans, DMK candidate, TR Baalu
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...