×

நோபால் இல்லயைா... ஆக்ரோஷமான கூல் கேப்டன் டோனி... 50 சதவீதம் அபராதம் விதித்த நடுவர்கள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடுவருடன் வாக்குவாதம் செய்த சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு அபராதம் விதி்க்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரகானே, பட்லர் களமிறங்கினர். ரகானே 14 ரன் (11 பந்து, 3 பவுண்டரி), பட்லர் 23 ரன் (10 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். சஞ்சு சாம்சன் 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கிய சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள், பின்னர் துல்லியமாகப் பந்துவீசி ராயல்ஸ் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.

அடுத்து வந்த திரிபாதி 10 ரன், ஸ்டீவன் ஸ்மித் 15 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அறிமுக வீரர் பராக் 16 ரன் எடுத்து ஷர்துல் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக விளையாடி ரன் எடுத்தார். அவர் 28 ரன் எடுத்து (26 பந்து, 1 பவுண்டரி) சாஹர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது. ஆர்ச்சர் 13 ரன், ஷ்ரேயாஸ் கோபால் 19 ரன்னுடன் (7 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சில் ஜடேஜா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்  தலா 2, சான்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த ரெய்னா 4, டு பிளஸ்சிஸ் 7, கேதார் ஜாதவ் 1 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்நிலையில் ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டோனி பொறுப்புடன் விளையாடினர். இறுதியில் தோனி 43 பந்துகளில் 58 ரன்களையும், ராயுடு 47 பந்துகளில் 57 ரன்களையும் எடுத்தனர். இருவரும் அவுட்டாகிவிட்ட நிலையில், சென்னை வெற்றி பெற இறுதி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது.

பரபரப்பாக வீசப்பட்ட அந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்ட நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது. இதை வெளியிலிருந்து பார்த்துகொண்டிருந்த தோனி களத்திற்குள் சென்று நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடைசி பந்தில் வெற்றி பெற நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி சென்னை அணிக்கு சாண்ட்னர் வெற்றி தேடி தந்தார். இதன் மூலம் சென்னை அணி 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்யலில் முதலிடத்தில் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jaipur, IPL 2019, Dhoni, Amber, argument, penalty
× RELATED இண்டியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட...