×

தமிழக கடற்பகுதியில் ஏப். 15 முதல் மீன்பிடிக்க தடை: 10,000 விசைப்படகுகள் கரைநிறுத்தம்

ராமேஸ்வரம்: தமிழக கடலில் வரும் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கில் மீன் வர்த்தகம் பாதிக்கப்படுவதுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. தமிழக கடல் பகுதிகளான மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி மற்றும் வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஏப். 15 முதல் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்படும். கன்னியாகுமரி துவங்கி சென்னை வரையிலான கடலோர பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்படுவதால், மீன்வரத்து குறைந்து மீன் வர்த்தகத்தில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும். விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அன்றாட வருவாய் இழப்பும் ஏற்படும்.

ஏப். 14ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மீன்பிடி தடை காலம் துவங்கும் நிலையில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நேற்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் நங்கூரமிட்டு கரை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை படகிலிருந்து இறக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். படகுகள் கரை நிறுத்தம் செய்யப்படுவதால் உள்ளூர் மீனவர்கள் தவிர மற்றவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.  பாம்பனில் இருந்து நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்து இன்று கரை திரும்புவதுடன் அனைத்து படகுகளும் பாம்பன் துறைமுகத்தில் நிறுத்தப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu Seashore , Tamil Nadu Sea, Fish, Keyboards
× RELATED நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில்...