×

பொள்ளாச்சி விவகாரம் : கைதாகியுள்ள 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்தது சென்னை அறிவுரைக்கழகம்!

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் மீதான குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதற்கான அரசாணை இதுவரை கிடைக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணையின் ரகசிய அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது. இந்த வழக்கில் மணிவண்ணன் என்பவர் 5வது நபராக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர். மேலும் மணிவண்ணனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அவர் விசாரணைக்கு ஆஜரானார். இதனிடையே பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகளின் சார்பில், சென்னை அறிவுரைக்கழகத்தில் முறையிடப்பட்டது.

குண்டர் சட்டம் போடப்பட்டால் ஒரு வருடம் வெளியே வர முடியாதவாறு சிறையில் இருக்க வேண்டும். இதனை எதிர்த்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேரும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய அறிவுரைக்கழகத்தில் முறையிட்டனர். இது தொடர்பாக நேற்று குற்றவாளிகள் 4 பேரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக்கழகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதான 4 பேர் மீதான குண்டர் சட்டம் உறுதியானது என சென்னை அறிவுரைக்கழகம் தெரிவித்துள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,thieves ,Chennai Archdiocese , Pollachi sex, arrest, thief law, Chennai intelligence
× RELATED பைக் ஏற்றி கணவரை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்