×

ஆஸ்திரேலியாவில் மே 18-ம் தேதி பொதுத்தேர்தல்: அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.  ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆண்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக லிபரல் கட்சியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. உட்கட்சி பூசல்  காரணமாக புதிய புதிய பிரதமர்கள் பதவியேற்பதும், பதவி விலகுவதும் அரங்கேறி வருகிறது.  இந்நிலையில், மால்கம் டபுர்னலுக்கும் லிபரல் கட்சி பொறுப்பாளர்களுக்கும் கருத்து மோதல்கள் உருவாகியது. இதனால் லிபரல் கட்சியில் தலைவர்  பொறுப்புக்கான தேர்தல் நடந்தது. ஆனால், அதில் மால்கம் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

இதனையடுத்து, ஆட்சி  ரீதியாக பல்வேறு அமைச்சர்கள் மால்கம்க்கு நெருக்கடி கொடுத்தனர். அங்குள்ள உள்துறை அமைச்சர் உட்பட 3 பேர் தங்கள் அமைச்சர் பதவியை  ராஜினாமா செய்தனர். இதனால், மால்கம்க்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  அப்போது பிரதமருக்கான போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகளில் 6 முறை  பிரதமர்கள் மாறி உள்ளனர். ஸ்காட் மாரிசனுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாததால் தொடர்ந்து ஆஸ்திரேலியா ஸ்காட் மாரிசன் பதவி வகித்து  வருகிறார்.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று  அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் லிபரல் கட்சியின் தேர்தல் பிரசார யுக்தி மற்றும் தேர்தல் வாக்குறுதிகளைப் பொருத்து அந்த கட்சி ஆட்சியை தக்க  வைக்குமா? அல்லது பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்குமா? என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.  ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.  இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் ஒருசில வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வருவதில்லை. கடைசியாக நடந்த பொதுத்தேர்தலில் 95 சதவீத  வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

ஸ்காட் மாரிசன் பேட்டி:

அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வளமாக வாழும் வகையில் நாட்டின் வலுவான  பொருளாதாரத்தை இந்த தேர்தல் தீர்மானிக்கும். உலகின் மிகச்சிறந்த நாட்டில் நாம் வாழ்கிறோம். ஆனால், உங்களின் வருங்கால பாதுகாப்பு வலுவான  பொருளாதாரத்தையே சார்ந்துள்ளது” என பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : General Elections ,Scott Morrison ,Australia ,announcement , Australia, General Election, Prime Minister Scott Morrison
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...