×

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தேர்தல் பிரச்சாரம் செய்ய தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாலகிருஷ்ணா ரெட்டி பிரச்சாரம் செய்ய தடை கோரி அமமுக வேட்பாளர் புகழேந்தி தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தேர்தல் பிரச்சாரம் செய்ய தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓசூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் புகழேந்தி இது தொடர்பாக நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டிக்கு ஆதரவாக அவரது கணவர் பாலகிருஷ்ணா ரெட்டி பிரசாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என முறையீடு செய்யப்பட்டிருந்தது. பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணா ரெட்டி, மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறார். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவசர வழக்காக நேற்று பிற்பகலில் விசாரிக்க நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்தது. அதன்படி நேற்று பிற்பகலில் நடந்த விசாரணையில், மனுதாரர் தரப்பில் புகைப்பட ஆதாரங்கள் தரப்பட்டது. அதில், அதிமுக வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக பாலகிருஷ்ணா ரெட்டி பரப்புரை மேற்கொண்ட புகைப்படங்கள் கொண்ட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை கண்ட நீதிபதிகள், இது தொடர்பாக நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறி வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர். அதன்படி, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு போது, மனைவிக்காக கணவர் பரப்புரை மேற்கொள்ளவதில் என்ன தவறு இருக்கிறது என கேட்ட நீதிபதிகள், பாலகிருஷ்ணா ரெட்டி தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை இல்லை என உத்தரவிட்டனர். மேலும் அமமுக வேட்பாளர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Balakrishna Reddy ,court , Balakrishna Reddy, Election Campaign, No Objection, Court
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...