×

வாட்டி வதைக்கும் வெயிலால் தக்காளி வரத்து குறைந்தது : கிலோ ரூ.30க்கும் மேல் விற்பனை

ஈரோடு: சுட்டெரிக்கும் வெயிலால் தக்காளி வரத்து குறைந்து, ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.30க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து தாளவாடி, கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் தக்காளி செடிகள் காய்ந்து கருகி வருகின்றன. இதனால் வரத்து குறைந்து, விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.15க்கு விற்பனையான தக்காளி, நேற்று கிலோ ரூ.30க்கு மேல் விற்பனையாகி வருவதால் பெண்கள் அதிர்ச்சிக்குள்ளாகி  உள்ளனர்.

இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில்,`தாளவாடி, தாராபுரம், ராயகோட்டை, ஒசூர் பகுதிகளில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், கோடை வெயில் அதிகரிக்க துவங்கி விட்டதால் தக்காளி செடிகள் காய்ந்து கருகி வருகிறது. இதனால், வரத்து மிகவும் குறைந்துள்ளது. தற்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து தக்காளி கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.420க்கு விற்பனையானது. அதே தற்போது பெட்டிக்கு ரூ.20 உயர்ந்து ரூ.450க்கு விற்பனையாகிறது. ஆந்திரா தக்காளியும் பெருமளவு சென்னையில் தான் விற்பனையாகிறது. ஏனென்றால், அங்கு பெட்டி ரூ.550க்கு விற்பனையாகிறது. நம் ஊரை விட அங்கு ரூ.100 அதிகமாக கிடைப்பதால் விவசாயிகள் நேரடியாக சென்னையில் விற்பனை செய்கின்றனர். மே மாதம் முழுவதும் தக்காளி விலை ஏறுமுகமாக தான் இருக்கும். கர்நாடக மாநிலத்தில் தற்போது மழை பெய்ய துவங்கி உள்ளது. அங்கு இருந்து தக்காளி வரத்தானால் இங்கு  விலை குறைய வாய்ப்புள்ளது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : winters , summer, tomatoes, sales
× RELATED பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில்...