×

சூளகிரி அருகே ஒரே இடத்தில் 87 நாளாக நிறுத்தி வைக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை

கிருஷ்ணகிரி: கர்நாடகா  மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை  அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். சிலை செய்ய 64 அடி உயரம், 26 அடி  அகலம் கொண்ட பாறையை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடையில் பாறை வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகாம் மற்றும் இரண்டு கைகள் மட்டும் வடிவமைத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. இந்த லாரி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது.
பின்னர் போச்சம்பள்ளி, மத்தூர்,  கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் நோக்கி புறப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி கார்கோ இன்ஜின்கள் 3 மற்றும் 5 ராட்சத டிப்பர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, சிலை ஏற்றப்பட்டலாரியுடன் இணைக்கப்பட்ட பின்னர் லாரி புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையை சென்றடைந்தது. அங்கிருந்து புறப்பட்ட லாரி சாமல்பள்ளம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. அவ்வாறு நிறுத்தப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை இன்று (ஏப்ரல்  11ம் தேதி) வரை 87 நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெங்களூரு செல்ல வனத்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரின் உரிய அனுமதி கிடைக்காததால் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிலை  அமைப்பாளர்கள் தெரிவித்தனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Perumal ,Suluggery ,place , Sulagiri, Perumal idol
× RELATED ஆதிவராக பெருமாள் கோயில் ஜெயந்தி விழா கொண்டாட்டம்