×

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை...... எடப்பாடி ஆட்சிக்கு மே 23 கடைசி நாள்: சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உற்சாகம்

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலால்  எடப்பாடி அரசு ஆட்டம் காண வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்களே?

 தமிகழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், ஏற்கனவே இவர்கள் 113 வைத்துள்ளனர். இதில் 2 பேர் டிடிவி.தினகரனுடன் பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் மெஜாரிட்டி இல்லாத ஒரு மைனாரிட்டி அரசாக உள்ளது. இந்த 4 தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் நடக்கும் போது, 22 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும். இதனால் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்துவிடும். தானாக அதிமுக மைனாரிட்டி அரசு கவிழ்ந்துவிடும். இந்த ஆட்சிக்கு மே 23 கடைசி நாள்.

10 தொகுதியில் வெற்றி பெற்றாக ேவண்டிய கட்டாயத்துக்கு அதிமுக அரசு தள்ளப்பட்டுள்ளதால், எந்த விலை கொடுத்தாவது வெற்றி பெறும் நோக்கத்தில் அதிமுக களத்தில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறதே?

 எந்த விலை கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக நினைக்கிறது. தமிழக மக்கள் எந்த விலை கொடுத்தாவது இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நினைப்போடு உள்ளனர். அதனால் இவர்கள் என்ன விலை கொடுத்தாலும் மக்கள் மனதை மாற்ற முடியாது.

அதிமுக பணம் கொடுப்பதை தடுக்க திமுக தரப்பு என்ன செய்யப் போகிறது?

 திமுக சார்பில் ஒரு வாக்கு சாவடிக்கு 20 களப் பணியாளர்கள் மிகுந்த கவனத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறர்கள். நிச்சயமாக இவர்களின் எந்தவிதமான தகிடுத்தத்தமாக இருந்தாலும் அதை முறியடிக்க காத்திருக்கிறார்கள்.
 
உண்மையிலே மக்கள் மனநிலை எப்படி தான் உள்ளது?

 மக்கள் மனநிலையை பொறுத்தவரை,தமிழகத்தில் 3 விதமான அலை. ஒன்று மோடிக்கும், தமிழகத்தில் எடப்பாடிக்கும் எதிரான அலை. அதையும் தாண்டி மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவான அலை. இதனால் தமிழகத்தில் 40க்கும் 40 என்பது சாதாரணமாக திமுக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

எடப்பாடி அரசு சாதாரணமாக அணுகக்கூடிய அரசு என்ற பிரச்சாரத்தை அதிமுக கையில் எடுத்துள்ளதே?

 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விட அதிகமான பாதுகாப்பு வைத்திருப்பவர் முதல்வர் எடப்பாடி. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை போன்று தன்னை எடப்பாடி நினைக்கிறார். எல்லா இடத்துக்கும் ஹெலிகாப்டரில் செல்வதும், மைக்கை கூட கையில் பிடித்து பேச நேரம் இல்லாமல் வாயில் கட்டி பேசுவதும், ஜெயலலிதாவுக்கு இருந்த போலீஸ் பாதுகாப்பை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறார். இப்படி தடபுடலாக இருப்பவரை எளிமையாக மக்களை சந்திக்கிறார் என்று எப்படி சொல்கிறார்கள் என தெரியவில்லை. அது முற்றிலும் பொய்யான தகவல். ஜெயலலிதாவை விட கூடுதல் ஆடம்பரத்தோடு எடப்பாடி வாழ்ந்து வருகிறார்.

எடப்பாடி அரசுக்கு எதிராக என்ன காரணத்துக்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

 தமிழக அரசை ரூ.4 லட்சம் கோடி கடனுக்கு தள்ளிவிட்டுள்ளார். விலைவாசி ஏற்றத்தை அவரால் தடுக்க முடியவில்லை. நீட் தேர்வை கோட்டை விட்டுவிட்டு, தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்வியை எட்டா கனியாக்கிவிட்டனர். ஒட்டுமொத்த மக்கள் விரோத அரசு எடப்பாடி அரசு. அதுமட்டுமல்ல மு.க.ஸ்டாலின் சொன்னது போல கலெக்‌ஷன், கமிஷன், கரெப்ஷன் இந்த மூன்றை மட்டுமே மையமாக வைத்து ஆட்சி நடத்துகிற அரசு. இந்த ஆட்சி நீடிக்க கூடாது என்பது பொதுமக்களின் விருப்பம்.

இந்த 22 தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக மாற்றம் வரும். 22 தொகுதியிலும் திமுக வெற்றி பெறும். ஆட்சி மாற்றம் உறுதியாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,Tamilnadu ,Edappadi ,Mayor ,Chennai Chennai Subramaniam , Stalin, Tamil Nadu, Chennai, Subramanian,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்