×

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரும் சென்னை குண்டாஸ் அறிவுரைக்கழகத்தில் ஆஜர்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள  குண்டாஸ் அறிவுரைக்கழகத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், சதிஷ் ஆகிய 4 பேரிடம் குண்டாஸ் அறிவுரைக்கழகத் தலைவர் ராமன் விசாரணை நடத்தி வருகிறார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்ததோடு, வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரீஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், பலதரப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தியதையடுத்து, டிஜிபி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் பொள்ளாட்சி வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீதும் குண்டாஸ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றகோரி உள்துறை செயலாளர் விண்ணப்பித்தார். பின்னர் தமிழக அரசே வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால் இதுவரை சிபிஐ இந்த வழக்கை ஏற்கவில்லை. எனவே இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வழக்கு சிபிஐக்கு மாற்றிய பின்னரும் எதற்காக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும், விசாரணை எப்போது சிபிஐக்கு மாற்றப்படும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம்  ஏப்ரல் 22 வரை 4 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi Sexual Affair ,Thirunavukarasu ,Chennai ,four , Pollachi Sexual Affairs, Thirunavukkarasu, Kundas Instructor, Azar
× RELATED தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்