×

போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் ரேஷன் அரிசி, துவரம் பருப்பு கடத்தல் : பொதுமக்கள் சுற்றி வளைப்பு

போடி: போடி அருகே ரேஷன் அரிசி, துவரம்பருப்பு மூடைகள் கடத்திச் சென்றபோது பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் சுமார் 7 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அரசு வழங்கும் குடிமை பொருட்களை பிரித்து மக்களுக்கு வழங்குவதற்கு இரண்டு ரேஷன் கடைகள் உள்ளது. இங்கு பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு வகைகள் சரிவர வழங்காமல் ரேஷன் கடைக்காரர்கள் கள்ளமார்க்கெட்டில் விற்பதாகவும், இதனால் பொதுமக்கள பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை அடிக்கடி பொதுமக்கள் பார்ப்பதால் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரேஷன் பொருட்களை கடத்தும் கும்பல்கள் 4 மூட்டை அரிசி, 2 துவரம்பருப்பு மூடைகளையும் சில்லமரத்துபட்டி ராதாகிருஷ்ணன் தெருவில் கடத்திச் சென்றுகொண்டிருந்தனர். அதனை கண்ட பொதுமக்கள் விரட்டியதால் துவரம்பருப்பு, அரிசி இருமுடைகளையும் போட்டுவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர். இதனால் பொதுமக்கள் அந்த தெருவில் திரண்டு இருமுடைகளை சுற்றி வளைத்தனர்.

புகாரின்படி போடி ஆர்.ஐ சுந்தர்ராஜ் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மூடைகளை கைப்பற்றி சில்லமரத்துபட்டிஅம்மாபட்டி சாலையிலுள்ள ஒரு ரேஷன் கடையினை பூட்டு போட்டு பூட்டினர். இதனையடுத்து போடி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.பொதுமக்கள் கூறியதாவது, இந்த ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் செய்பவர்கள் இறந்தவர்கள், வெளியூர் சென்றிருப்பவர்களின் கார்டுகளை 100க்கும் மேல் வைத்து கொண்டு அதில் கிடைக்கின்ற பொருட்களை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். எனவே ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க சிவில்சப்ளை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bodi, ration rice, kidnapping
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி...