×

சமரச மையத்தில் இதுவரை 11,234 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது: தலைமை நீதிபதி தஹில் ரமாணி பேச்சு

சென்னை: நீதிமன்றத்தின் சுமைகளை குறைப்பதில் சமரச மையங்களுக்கு முக்கிய பங்கு வகிப்பதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையங்கள் மூலமாக சுமூகத் தீர்வு காணச் செய்வதே இதன் நோக்கமாகும். நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகளை முடித்து வைக்க தங்களது வழக்குகளை சமரச மையத்திற்கு மனுதாரரோ அல்லது அவரின் வழக்குரைஞரோ அனுப்பி முடித்து வைக்க வேண்டுகோள் விடுக்கலாம். இந்த சமரச மையங்களின் நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள், உறவுகள் மேம்பட வழிவகை செய்கின்றது. உகந்த தீர்வுகளை எட்டுவதால் மேல்முறையீடு தவிர்க்கப்படுகின்றது. செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றது. சமரச முடிவுகளில் காத்திருப்பு நேரங்களும், பொருட்செலவுகளும் சேமிக்கப்படுகின்றன.இவற்றின் பயன்பாடுகள் நமது குடும்பத்திற்காகவும், சமூக செயல்பாட்டிற்காகவும் அமைகின்றன.

இந்நிலையில், சமரச மையம் தொடங்கப்பட்டதன், 14-வது ஆண்டு விழா சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தலைமை நீதிபதி தஹில் ரமாணி, சமரச மையங்கள் மூலம் குடும்ப பிரச்சனைகள் ,வணிகம் சார்ந்த பிரச்சனைகள் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் இந்தியாவிலேயே கடந்த 2005-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் செயல்படும் சமரச மையம் அமைக்கப்பட்டது என்று கூறினார். இந்த சமரச மையத்தில் இதுவரை 18,000 வழக்குகள் பதிவான நிலையில், 11,234 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dahil Ramani ,reconciliation center , Reconciliation Center, 11,234 cases, Chief Justice Dahil Ramani
× RELATED கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச...