×

லிபியாவில் மூண்டது உள்நாட்டு போர் : அரசுப்படை - கிளர்ச்சிப்படை இடையேயான பயங்கர மோதலில் 21 பேர் பலி

திரிப்பொலி : லிபியாவில் மீண்டும் உள்நாட்டு போர் தொடங்கியுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் தோன்றியுள்ளது. அரசு படைக்கும் கிளர்ச்சி படைக்கும் இடையேயான மோதலில் 21 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். லிபியாவில் முன்னாள் அதிபர் Muammar Gaddafi,யின் ராணுவப்படை தளபதியாக இருந்த Khalifa Haftar தனது கிளர்ச்சி படைகளோடு தலைநகர் திரிப்பொலி நோக்கி முன்னேறி வருகிறார். அவரது கிழக்கத்திய லிபியன் தேசியப்படையை தடுக்க ஐநா ஆதரவு பெற்ற அரசுப்படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.  

இருதரப்புக்கும் ஏற்பட்ட கடும் சண்டையில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லிபியாவின் திரிப்பொலி விமான நிலையத்தின் மீது கிளர்ச்சிப்படைகள் குண்டுகள் வீசியதால் மிட்டிகா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. லிபியாவில் 34 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருந்த காடாபி 2011ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தேசிய இடைக்கால பேரவை அரசின் கீழ் ஆட்சி நடந்து வருகிறது.

ஆனால் அரசு படைகளோடு ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மற்றும் கிளர்ச்சி படைகள் மோதி வருகின்றன. தற்போது மீண்டும் அங்கு உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு போர் குறித்து அரசு படையைச் சேர்ந்த முகமது கனோவ்னா கூறியுள்ளதாவது,நாங்கள் இந்த நாட்டை மீட்போம் என்று எங்கள் மக்களுக்கு உறுதி அளிக்கிறோம்; மூளைச் சலவை செய்யப்பட்ட கிளர்ச்சிப்படையினர் சரணடைய வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம்; நாங்கள் தேசிய கிளர்ச்சிப்படையை அனுமதிக்க மாட்டோம். லிபியா ஒரு ராணுவ பகுதியாக மாறாது, என்று கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : civilians ,civil war ,government ,Libya ,insurgency , Muammar Gaddafi,Khalifa Haftar,Civil War, Rebel Force, Government Force, Libya, Tripoli
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...