×

மக்களவை தேர்தல் 2019 ; 185 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கவனம் ஈர்க்கும் நிஜாமாபாத் தொகுதி

நிஜாமாபாத்: தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் 185 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், முழுக்க முழுக்க வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்திருக்கிறது. நாட்டில் அதிகஎண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக நிஜாமாபாத் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவை எதிர்நோக்கியுள்ள நிஜாமாபாத் தொகுதியில், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா மற்றும் விவசாய சங்கத்தினர் உட்பட மொத்தம் 185 பேர் போட்டியிடுகின்றனர். எனினும் இத்தேர்தலில் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்துவதில்லை என்பதில் தேர்தல் ஆணையம் உறுதி காட்டுகிறது. ஒரு இயந்திரத்தில் 24 வேட்பாளர்கள் மற்றும் சின்னம் வீதம் ஒரே வரிசையில் 12 வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக நிஜாமாபாத் தொகுதிக்கு மட்டும் 26,820 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2,600 விவிபேட் இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதிக்கு இவ்வளவு அதிகமான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது உலகிலேயே இது தான் முதல் முறை. ஓட்டுப் பதிவின் போது மின்னணு இயந்திரங்களை எடுத்து வரவும், எடுத்துச் செல்லவும் அவசர உதவிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிக ஊழியர்கள் தேவைப்படுவதால் அவர்களின் பயணம் மற்றும் அகவிலைப்படிக்கு பெரும் தொகை தேவைப்படுகிறது.

இவை தவிர அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் அதிகளவில் தேவை என்பதால் நிஜாமாபாத் தொகுதியில் தேர்தல் நடத்த ரூ.35 கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் மதிப்பிட்டுள்ளது.  இந்த செலவு ஒவ்வொரு தொகுதிக்குமான சராசரி செலவை காட்டிலும் ரூ.15 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,Lok Sabha ,Election ,Nizamabad , Telangana State, Nizamabad, voting machines
× RELATED குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை...