×

மகா கூட்டணி வென்றால் மத்திய அரசின் வழிகாட்டியாக தேவகவுடா இருப்பார் : குமாரசாமி பேட்டி

பெங்களூரு: மகா கூட்டணி வெற்றிபெற்றால் மத்திய அரசின் வழிகாட்டியாக தேவகவுடா இருப்பார் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த குமாரசாமி, மண்டியாவில் தனது மகனை தோற்கடித்து அரசியல் ரீதியாக என்னை ஒழித்துக்கட்ட சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். ஆனால் மண்டியா மக்கள் அத்தகையவர்களை ஆதரிக்க மாட்டார்கள் என தாம் நம்புவதாக கூறினார். மண்டியாவில் 8 தொகுதிகளிலும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். அது தவிர எம்.பி,. 3 எம்.எல்.சி.க்களும் இருக்கிறார்கள்.

எங்கள் கட்சியின் வெற்றிக்கு அவர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவார்கள். தாம் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. எங்கள் கூட்டணி வேட்பாளர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்று உறுதிபட கூறினார். மேலும் பேசிய அவர் மத்தியில் மகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தமது தந்தை தேவகவுடா நிச்சயம் பிரதமராக மாட்டார். ஆனால், மத்திய அரசின் வழிகாட்டியாக இருந்து நாட்டின் நலனை பாதுகாப்பார். இந்த தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே தற்போதைய இலக்கு. பிரதமர் யார் என்பதை பின்பு முடிவு செய்து கொள்வோம் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition ,government ,DMK ,Coomaraswamy , Maha Alliance, Deve Gowda, PM candidate, guide
× RELATED பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக...