×

பாஜ, காங். தயவின்றி ஆட்சியா? நோ சான்ஸ்!: லோகேஸ்காரு தீர்க்க தரிசனம்லு

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், முதல் முறையாக தேர்தல் களம் கண்டுள்ளார். மங்களகிரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அவர் நேற்று அளித்த பேட்டி: மாநிலங்கள் கூறுவதை காது கொடுத்து கேட்கும் பிரதமர் நமக்கு தேவை. மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. கூட்டாட்சி தத்துவம் பின்பற்றப்பட வேண்டும். தெலுங்கு தேசத்தை எப்படியாவது தோற்கடிக்க, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரசுடன் பிரதமர் மோடி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுகிறார். காங்கிரஸ், பாஜ அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகிறார். அவரை யாரும் நம்புவதில்லை. அவரது திட்டம் பலனளிக்காது. எல்லா கூட்டணியுமே பாஜ அல்லது காங்கிரஸ் கூட்டணியாக உள்ளன. தேசியளவில்  மாநில கட்சிகளுக்கு எந்த பங்கும் இல்லை. அதனால், காங்கிரஸ் அல்லது பா.ஜ  இல்லாத மாற்று அணி என்பது கற்பனையில் கூட சாத்தியம் இல்லை. இந்த மக்களவை  தேர்தலில் தெலுங்கு தேசம் உட்பட மாநில கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி  பெற்றால், அவை ஆட்சியமைக்க தேசிய கட்சிகள் ஆதரவளிக்க தயாராக இருக்க வேண்டும்.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் 125 இடங்களிலும், மக்களவை தேர்தலில் 18 முதல் 20 இடங்களையும் தெலுங்கு தேசம் கைப்பற்றும். சந்திரபாபு நாயுடுவுக்கு 40 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது. அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். மத்திய அரசியலுக்கு சந்திரபாபு நாயுடு வரமாட்டார். ஆந்திரா தற்போது முக்கியமான தருணத்தில் உள்ளது. ஆந்திராவுக்கு அவர் தேவை. ஆந்திராவை பிரித்த பின், ஆந்திராவையும், ஆந்திர மக்களையும் பிரதமர் மோடி புறக்கணித்து விட்டார். மாநிலங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு தேவை. ஆனால், நமது பிரதமருக்கு, இந்தியாவில் என்ன நடக்கிறது என தெரியவில்லை. அவர் எப்போதும் விமானத்தில்தான் சுற்றுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Logoskurra , BJP, Congress,lokesh
× RELATED காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை;...