×

ஆரத்தி எடுத்தால் தேனியில் 1000: அதிமுக மீது காங். குற்றச்சாட்டு

விருதுநகர்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விருதுநகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேனியை சேர்ந்தவர் இல்லை; அவர் எப்படி போட்டியிடலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். ஒரு முதல்வர் இப்படி பேசலாமா? அவரது கட்சித் தலைவர்களான எம்ஜிஆர் ஆண்டிபட்டியிலும், ஜெயலலிதா பர்கூரிலும் போட்டியிடவில்லையா? காங்கிரஸ் கட்சியினர் மட்டும் வேறு தொகுதிகளில் போட்டியிடுவது தவறு என  கூறுவது வேடிக்கையாக உள்ளது.

தேனியில் ஆரத்தி என்ற பெயரில் தேர்தலுக்கு முன்பாக அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். இதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஆளுங்கட்சியினர் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகளை மட்டும் தேர்தல் ஆணையம் குறி வைக்கிறது.தேனி மக்களவை தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிகளவில் மீறப்படுகின்றன. முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர் இல்லங்களில் ஏன் சோதனை நடத்தவில்லை. பாஜ தலைவர்கள் வீட்டில் பணம் இல்லையா? கன்னியாகுமரி தொகுதி பக்கம் வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் ஏன் செல்லவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arati ,AIADMK , Arati ,1000 ,Cong ,AIADMK ,Accusation
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி