×

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த 4 தேர்வுகள் ேம மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஜனவரி 7ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்:3, ஏப்ரல் 20ம் தேதி நடைபெறவிருந்த சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் தேர்வு, பிப்ரவரி 7ம்  தேதி அறிவிக்கை வெளியிடப்பட்ட தொழில் மற்றும் வர்த்தக துறைக்கான கெமிஸ்ட்(வேதியியலாளர்), ஜூனியர் கெமிஸ்ட் தேர்வு, பொதுப்பணித்துறை, மண்ணியல், சுரங்கத்துறையில் உதவி புவியியலாளர்/ புவி வேதியியலாளர்  தேர்வு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான துணை கண்காணிப்பாளர் தேர்வு மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் தேர்வு மே 11ம் தேதியும், மற்ற 3 தேர்வுகள் மே 5ம் தேதியும்  நடைபெறும்.

அதே போல், தமிழ்நாடு கருவூலக் கணக்கு தணிக்கை துறைக்கான கணக்கு அலுவலருக்கான எழுத்து தேர்வு, கிரேட் 2 அசிஸ்ெடன்ட் பப்ளிக் பிராசிக்கியூட்டர் தேர்வு ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மே 5ம் தேதி  நடைபெறும். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DNPCC ,elections , The parliamentary election , Optional, Adjournment
× RELATED மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு...