×

குஜராத் பாஜ, காங். வேட்பாளர்களில் 5 பேர் மட்டுமே லட்சாதிபதிகள்: மற்ற அனைவரும் கோடீஸ்வரர்கள்

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு, போட்டியிடும் பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்களில் 5 பேர் தவிர மற்ற அனைவரும் பெரிய கோடீஸ்வரர்கள். மெஹ்சானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அம்பாலால் படேலுக்கு ரூ. 69.9 கோடிக்கும், அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜ வேட்பாளர் சாரதாபென் படேலுக்கு ரூ. 44 கோடிக்கும் சொத்துகள் இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நவ்சரி தொகுதியில் போட்டியிடும் தற்போதைய பாஜ எம்பி. சந்திரகாந்த்துக்கு ரூ. 44.6 கோடி, ஜாம்நகர் பாஜ எம்பி. பூனம் மதாமிற்கு ரூ. 42.7 கோடி, போர்பந்தர் தொகுதி பாஜ வேட்பாளர் ரமேஷ் தாதுக்குக்கு ரூ. 35.75 கோடிக்கும் சொத்துகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் தவிர,  காங்கிரசை சேர்ந்த 3, பாஜவின் 2 வேட்பாளர்கள் தங்களின் சொத்து மதிப்பை ரூ. 1 கோடிக்கு குறைவாக குறிப்பிட்டு உள்ளனர். காங்கிரசை சேர்ந்த ஜித்து சவுதரி ரூ. 66.1 லட்சம், நரேஷ் மகேஸ்வரி ரூ. 38.13 லட்சம், ஷெர்கான் பதாக் ரூ. 33.4 லட்சம் சொத்துகளுடனும் பாஜ.வின் கீதாபென் ரத்வா ரூ. 86.3 லட்சம், மான்சுக் வசவா ரூ. 68.35 லட்சத்துடனும் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gujarat Bhaj , Gujarat, Bhaj, Cong., Candidates, 5 persons, Lakshadipathasama
× RELATED “மக்களுக்குத் தேவை ஆக்கபூர்வமான...