×

பரிசு பெட்டகத்துக்கு வாக்குகோரி குறும்படம் : டிடிவி.தினகரன் வெளியிட்டார்

சென்னை,: பரிசு ெபட்டகத்துக்கு வாக்களிக்க வலியுறுத்தி குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டார். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொது ெசயலாளர் டிடிவி.தினகரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அமமுக கூட்டணி கட்சியான தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி சார்பில் விவசாயத்தையும், விவசாய மக்களின் வாழ்வு மலர்ந்திட ‘பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனர் வி.எம்.எஸ்.முஸ்தபா தயாரித்துள்ள அந்த குறும்படம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DTV Thinakaran , Voting icon , gift box, TTV Dinakaran
× RELATED தேர்தலில் படுதோல்வி எதிரொலி 28ம் தேதி...