×

மக்களவை தேர்தலில் முதல் ஓட்டு போட்டார் எல்லைப் படை டிஐஜி

லோகித்பூர்,: மக்களவை தேர்தலுக்கான முதல் வாக்கை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை டிஐஜி செலுத்தினார். மக்களவை தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே மாதம் 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அருணாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் இந்த மக்களவை தேர்தலுக்கான முதல் வாக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையின் லோகித்பூர் விலங்குகள் பயிற்சி பள்ளியில் தலைவராக பணியாற்றும் டிஐஜி சுதாகர் நடராஜன் முதல் ஓட்டை நேற்று காலை 10 மணிக்கு பதிவு செய்தார். அவர் தனது  தபால் ஓட்டை பதிவு செய்து, அதை சீல் வைத்து அனுப்பி வைத்தார். இந்த தேர்தலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 30 லட்சம் பேர் சர்வீஸ் வாக்காளர்களாக வாக்குபதிவு செய்ய உள்ளனர். சிஆர்பிஎப், பிஎஸ்எப், இந்தோ திபெத் படை, தொழிற் பாதுகாப்பு படையினர் ஆகியோர் நாட்டின் எல்லையில் பணியாற்றினாலோ, நாட்டுக்குள் அல்லது வெளியே பணியாற்றும் ஆயுதப்படையை சேர்ந்த வீரர்கள் தங்களை சர்வீஸ் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டு வாக்களிக்கலாம்.

வாக்குப்பதிவு செய்வது எப்படி?

ஆயுதப்படையில் பணியாற்றும் வீரர்கள் எந்த தொகுதியை சேர்ந்தவரோ, அந்த தொகுதியை சேர்ந்த வாக்குப்பதிவு அதிகாரி, சம்மந்தப்பட்ட வீரருக்கான வாக்கை தபாலில் அனுப்பி வைப்பார். அத்துடன் 13 ஏ என்ற உறுதிமொழி படிவமும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த தபாலை பெற்றுக்கொண்ட ஆயுதப்படை வீரர் அந்த படிவத்தில் ைகயெழுத்திட்டு விட்டு வாக்குசீட்டில் தான் விரும்பிய சின்னத்தில் தனது வாக்கை பதிவு செய்து அதை சம்மந்தப்பட்ட வாக்குப்பதிவு அதிகாரிக்கு தபால் மூலம் திருப்பி அனுப்ப வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : vote ,election ,Lok Sabha ,Border DIG , First vote , Lok Sabha election , Border DIG
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...