×

பாமகவுக்கு எதிராக பிரசாரம் : வன்னியர் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் ராமமூர்த்தி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: வன்னியர் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். எனவே 40 தொகுதிகளிலும் வன்னியர் கூட்டமைப்பினர் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். பாமகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளோம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, பொது சொத்து மற்றும் நல வாரியம் ஆகியவை திமுக ஆட்சி காலத்தில்தான் நிறைவேற்றப்பட்டது. வன்னியர்களுக்கான பல்வேறு பிரச்னைகளுக்கு திமுகவால்தான் தீர்வு காணமுடியும். எனவே, தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவு அளித்து பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

மேலும், அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு ஊழல்களை செய்துள்ளார். குறிப்பாக, 200க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு தடை விதித்து பின்னர் அந்த தடையை நீக்கி அதில் மிகப்பெரிய ஊழல் செய்துள்ளார். மூன்று பொதுத்துறை அரசு நிறுவனங்களை மூடி தனியார் துறைக்கு லாபம் ஈட்டும் வகையில் ஊழலும் செய்துள்ளார். 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களை பாமக நிறுவனர் ராமதாஸ் அபகரிக்க முயற்சி செய்தார். அந்த பொதுச் சொத்துக்களை சட்டரீதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீட்டோம்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள வன்னியர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். வன்னியர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு சிலை இல்லாமல் இருந்தது. இதை அப்போதைய மேயர் ஸ்டாலின் அமைத்து கொடுத்தார். கலைஞர் திறந்து வைத்தார். இந்த ஆட்சி போகட்டும் என தமிழ் சமுதாயமே இயங்குகிறது. ராமதாசும், அன்புமணியும் எல்லோரையும் பேச அழைக்கிறார்கள். ஏன் என்னோடு வர சொல்லுங்களேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vannier Federation , Announcement , Vannier Federation
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற...