×

பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் அதிமுக டெபாசிட் கூட வாங்காது... தங்கதமிழ்செல்வன் பேட்டி

பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது என தேனி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார். தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் நேற்று மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘‘தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் பணத்தை போலீஸ் வாகனத்தில் எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், அவரது மகன் தேனி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் ஆற்றில் மணல் அள்ளி பிற மாநிலங்களுக்கு கடத்துகின்றனர். மேகதாது அணை கட்ட நாங்கள் எதிர்த்து வருகிறோம். அவர்கள் அந்த அணை கட்ட மணல் சப்ளை செய்கின்றனர். மீதமுள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த மாட்டார்கள்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : interview ,Goldman , money goes up , AIADMK deposit, not buy
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு