×

வடநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது திட்டம் செயல்படுத்தப்படும்: தமிழச்சி தங்கபாண்டியன் வாக்குறுதி

சென்னை: தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று  மயிலாப்பூர் தொகுதியில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். மயிலாப்பூர் லாயிட்ஸ் ரோடு, இஸ்மாயில் ரோடு, அவ்வை சண்முகம் சாலை, துலுக்கானம் தோட்டம் மெயின் ரோடு, ராகவன் மெயின் ரோடு, ரோட்டரி நகர்  மெயின் ரோடு, சிட்டி சென்டர், கணேசபுரம், பிருந்தாவனம் தெரு, வீர பெருமாள் கோயில் தெரு, சிதம்பரம் சாமி தெரு, அப்பர் சாமி தெரு, ராயவேட்டை திருவீதிஅம்மன் கோயில் தெரு, ரங்கையா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் 11 மணி வரை வீதிவீதியாக சென்று தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பொதுமக்களிடம் கூறியதாவது:

நான் இந்த பகுதிக்கு அருகில் உள்ள ராணி மேரி கல்லூரியில் தான் பணியாற்றினேன். 2004-05 காலகட்டத்தில் ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார். அப்போது, அந்த கல்லூரியை சுற்றியுள்ள இந்த பகுதியையும் இடிக்க வேண்டும் என்று முடிவுசெய்யபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பகுதியில் இருந்து கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்திற்கு நாங்களும் ஆதரவு வழங்கினோம்.
அப்போது அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவின் முயற்சியால் கடற்கரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டக்கூடாது என்ற விதி உருவாக்கப்பட்டது. அதனால், ராணிமேரி கல்லூரி மற்றும் அருகில் உள்ள பகுதிகள் காப்பாற்றப்பட்டது.

இந்த பகுதியில் இன்று காலை நான் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்தபோது பெரும்பாலான தாய்மார்கள் குடிநீருக்காக குடங்களை ஏந்தி சென்று கொண்டிருந்தனர்.கலைஞர் ஆட்சி காலத்தில் தான் சென்னைக்கு அருகில் உள்ள வடநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் முதல் அலகு செயல்படுத்தப்பட்டது. என்னை வெற்றிபெற செய்தால் வடநெம்மேலியில் 250 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் வகையில் 2வது அலகு செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின் போது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 2nd Scheme of Marine Water Drinking ,Vadanemmeli ,Tamilnadu Golden Thunderbird , Vadanemmeli, Tamilnadu Thangapandian, Promise
× RELATED வடநெம்மேலி பாம்பு பண்ணையில் செங்கை கலெக்டர் திடீர் ஆய்வு