×

எந்த தொகுதியில் போட்டின்னு தெரியாமலே சுமலதாவுக்கு ஆதரவாக புதுமணத்தம்பதி பிரசாரம்

பெங்களூரு: கர்நாடக  மாநிலம் சென்னப்பட்டணா அருகே வசித்து வரும் நாகராஜ்  என்பவர் அம்பரீசின் தீவிர ரசிகர்.  இந்த நிலையில், நாகராஜூக்கும், ராமநகரை சேர்ந்த  ரேஷ்மாவுக்கும், பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த  மாதம் 30ம் தேதி பிடதியில் உள்ள கல்யாண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம்  நடந்தது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மண்டபத்தில் இருந்து  நாகராஜூம், ரேஷ்மாவும் மணக்கோலத்தில் வெளியே வந்தனர். பின்னர் தனது  மோட்டார் சைக்கிளில் மனைவி ரேஷ்மாவை ஏற்றிக் கொண்டு நாகராஜ் சென்றார்.  மண்டபத்தை சுற்றி புதுமண தம்பதி மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர். அப்போது  மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் அம்பரீசின் மனைவி  சுமலதா வெற்றி பெற வேண்டும் என்றும் சுமலதாவுக்கு ஓட்டுப்போடும் படியும்  கூறி நாகராஜிம், ரேஷ்மாவும் கோஷங்களை எழுப்பினார்கள்.  மண்டியா மக்களவை தொகுதிக்குள் ராமநகர் வருவதில்லை. அப்படி இருந்தும் ராமநகரில் சுமலதாவுக்கு  புதுமண தம்பதி ஆதரவு திரட்டியது பரபரப்பை  ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : campaign ,Sumalatha , Any block, competition, sumalatha, voodhathatampathi, campaign
× RELATED கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம்...