×

குன்னுார் சிம்ஸ் பூங்காவில் மரத்துண்டுகளில் மலர் நாற்று

குன்னூர்: குன்னூரில் தோட்டகலை துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மரத்துண்டுகளை கொண்டு மலர் தொட்டிகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். குன்னூர் சிம்ஸ் பூங்கா சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் பூங்காவாக உள்ளது. 12 ஹெக்டேர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 1780 மீட்டர் உயரத்தில் சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் பழக் கண்காட்சி பிரசித்தி பெற்றது. தற்போது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிம்ஸ் பூங்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது புது முயற்சியாக மரத்துண்டுகளை பயன்படுத்தி பெரணி, ஆர்க்கிட் உள்ளிட்ட தாவரங்களை நடவு செய்து வருகின்றனர். இது சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் கூறியதாவது: இந்த பூங்காவில் நூற்றாண்டுகளை கடந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. மழை மற்றும் காற்று வீசும் சமயங்களில் முதிர்ந்த மரங்கள் வேருடன் சாய்ந்து விழும். இந்த மரங்களில் தேவைக்கு ஏற்ப துண்டுகளாக வெட்டி சதுரம், செவ்வகம் உள்ளிட்ட வடிவங்களா மாற்றுகிறோம். பின்பு அந்த மரத்துண்டுகளில் லேசான துளைகள் இட்டு இயற்கை உரம், மரத்தூள் சிறதளவு மற்றும் மண் சேர்த்து பெரணி அல்லது ஆர்க்கிட் கிழங்குகளை வைத்து வருகிறோம், என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kunnar Sims Park , Kunnar, Sims Park, Flower Seedling
× RELATED பைக்கில் சென்றபோது காதலி தீக்குளிப்பு காதலன் சாவு