×

ஐ.ஓ.பி வங்கியின் துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேடு:442 பேர் மீது வழக்குபதிவு

சென்னை:  ஐ.ஓ.பி வங்கியின் துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்த வழக்கில்  வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 442 பேருக்கு உச்சநீதிமன்றம் குற்ற பத்திரிக்கை நகல்களை வழங்கியது.கடந்த 2012,2013 ஆம் ஆண்டுகளில்  போலி சான்றிதழ்கள் மூலம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தபால் பிரிவில் ஊழியர்களை நியமித்ததாக குற்றசாட்டு எழுந்தது.போலி சான்றிதழ்களை சமர்ப்பித்ததோடு, மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

 இது தொடர்பாக  ஐ.ஓ.பி வங்கியின் முன்னாள் தலைவர் நரேந்ரா உட்பட 442 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜவஹர் முன் ஆஜர் ஆகினர். அவர்கள் 442 பேருக்கும் குற்ற பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டதை அடுத்து  வழக்கு விசாரணை வரும் ஜூன் 12- ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IOB ,cleaning worker , IOB Bank, Supreme Court, CBI
× RELATED ரூ.2.14 கோடி மோசடி ஐஓபி வங்கி மேலாளருக்கு...