×

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ஜெ.ஜெயவர்தனுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பு: திரளான தொண்டர்கள் பங்கேற்பு

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் தி.நகர் பவர் ஹவுஸ் பகுதி, கங்கை அம்மன் கோயில் பகுதி பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன் அதிமுக மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா எம்.எல்.ஏ, பகுதி செயலாளர் டி.டி.பால்ராஜ், வட்ட செயலாளர்கள் வி.எஸ்.வெங்கட், மோல்டிங் மணி அமாவாசை, மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பாமக லோகநாதன், தேமுதிக வி.சி.ஆனந்தன், பாஜக டால்பின் ஸ்ரீதர், தமாகா மனோகர், புதியநீதிகட்சி துரைராஜ், புரட்சிபாரதம் ராஜி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தொகுதி மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர். தொகுதி மக்களின் நாடி நரம்புகளை உணர்ந்தவர். அதற்கு ஏற்ப திட்டங்களை வாதாடி போராடி பெற்று தரக்கூடிய திறமைமிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறார். இதுபோன்ற நாடாளுமன்ற உறுப்பினர் பணி என்பது இந்த தொகுதிக்கு மட்டும் அவசியம் அல்ல. வரும் நாட்களில் தமிழகத்துக்கும் அவசியம் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இப்போது நான் எம்ஜிஆர் நகரில் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த பகுதியில்தான் ஜெயவர்தனுக்கு அதிக வாக்குகள் கிடைக்க போகிறது. இந்தியாவிலேயே ஒரு இளைஞருக்கு 26 வயதிலேயே நாடாளுமன்ற தேர்தலில் நிற்க கூடிய வாய்ப்பை புரட்சி தலைவி கொடுத்து டெல்லிக்கு அனுப்பி அவரும் பாராளுமன்றத்தில் வரலாறு படைத்த நிகழ்வு தமிழகத்தில் இருக்கிறது. தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயவர்தன் என்பதை 100 சதவீதம் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜி .கே. வாசன் பேசினார். எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகில் 181, 182, வட்டத்தில் நடந்த பிரசாரத்தில் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, பகுதி செயலாளர் மலைராஜன், வட்ட செயலாளர்கள் 181 கணேசன், 182. கிருஷ்ணமூர்த்தி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேமுதிக தினகரன், தமாகா சத்யநாராயணன், புதியநீதிகட்சி எஸ்.என்.ரமேஷ், புரட்சிபாரதம் ராஜி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : GK Vavunan ,Senate ,South ,constituency , South Chennai, Parliamentary constituency, GK Vasan, J. Jayawardhan,
× RELATED ஜார்ஜியா மாகாண செனட் சபை தேர்தல்: தமிழர் அஸ்வின் ராமசாமி போட்டி