×

காப்பியடிச்சிட்டாங்க! மெகபூபா லபோதிபோ

காஷ்மீர் மாநில மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவில் உள்ள 35ஏ பிரிவை  நீக்கும் பிரச்னை பெரும் பிரச்னையாக பிரசாரம் செய்யப்படுகிறது. இம்மாநில மக்களின் குடியுரிமை, வசிப்பிடம் தொடர்பான இந்த சிறப்பு சட்டம் வரும் 2020 ஆண்டுக்குள்  ரத்து செய்யப்படும் என பாஜ தேசிய தலைவர் அமித்ஷா  அறிவித்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்களில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும்,  காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியும் ஒருவர். அனந்த்நாக் மக்களவை தொகுதியில் போட்டியிடும் இவர், அதற்கான வேட்புமனுவை நேற்று தாக்கல்  செய்தார்.

பிறகு அவர் அளித்த பேட்டியில், பாஜ.வையும். காங்கிரசையும் ஒரு பிடி பிடித்தார்.
அவர் கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டால் இந்தியா உடனான காஷ்மீரின் உறவு முடிவுக்கு வரும். அதற்கான  காலக்கெடு வரும் 2020 ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கடந்த 2015ம் ஆண்டில் எனது தந்தை முப்தி முகமது சயீத் மற்றும் பாஜ  இடையே ஏற்பட்ட கூட்டணி தேர்தல் அறிக்கை போல் உள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 வது சட்டப்பிரிவு, குடியிருப்பு பகுதியில் இருந்து பாதுகாப்பு  படையை குறைத்தல் போன்ற அம்சங்களில் எங்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வார்த்தைக்கு வார்த்தை காப்பி அடித்துள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kappiyaticcittanka!, Megabuba, lobotypo
× RELATED “மக்களுக்குத் தேவை ஆக்கபூர்வமான...