×

பாஜ ஆட்சியில் யாராவது ஒரு கருத்தை சொன்னால் அர்பன் நக்சலைட் என்று சித்தரிக்கப்படுகிறார்கள்: எழுத்தாளர் சல்மா பேட்டி

பாஜ ஆட்சியில் யாராவது ஒரு கருத்தை சொன்னால் அர்பன் நக்சலைட் என்று சித்தரிக்கப்படுகிறார்கள் என்று எழுத்தாளர் சல்மா கூறியுள்ளார். பாஜகவின் வெறுப்பு அரசியலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று 200 எழுத்தாளர்கள் அறிக்கை வெளியிட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் கையெழுத்திட்ட தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் சல்மாவிடம் கேட்ட கேள்வியும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:

5 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக அரசுக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்க காரணமென்ன?
 இந்தியாவில் உள்ள முக்கியமான எழுத்தாளர்கள் 200 பேர் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளோம். அதில் பாஜக ஆட்சியின் ஐந்து ஆண்டுகள் என்பது சிறுபான்மையினர், தலித்துகள் எல்லாரையும் அடித்து கொல்வது, வெறுப்பை உருவாக்குவது மற்றும் வெறுப்பு அரசியல் நிறைய அளவுக்கு வந்திருக்கிறது. ஒரு நாடு என்பது அரசியல் சாசன சட்டம் என்ன சொல்கிறது என்றால், இங்கு வசிப்பவர்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன செய்ய வேண்டும் அப்படின்னு சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த 5 ஆண்டுகளில் அது சுத்தமாக மீறப்பட்டுள்ளது. யார் என்ன சாப்பிட்டார்கள். மாட்டிறைச்சி சாப்பிட்டார்களா? அவரை அடித்து கொல்ல வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது.

பாஜக ஆட்சியில் தனிமனிதனுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்களே?
பாஜக ஆட்சியில் தனி மனித சுதந்திரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் வந்திருக்கிறது. ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. முழுமையாக வெறுப்பு அரசியலை ெதாடர்ந்து இந்த அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. தனி மனித சுதந்திரத்தை பற்றி யாராவது பேசினாலே சுட்டு கொல்லப்படுகிறார்கள். குறிப்பாக எழுத்தாளர்கள் சுட்டு கொல்லப்படுகிறார்கள். இதில் தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் மிக முக்கியமான எழுத்தாளர்கள் ஆவர். இவர்கள் இந்த கருத்தை சொன்னதற்காகவே கொலை செய்யப்பட்டார்கள்.

கேள்வி கேட்பவர்களை எல்லாம் நக்சலைட் என்று சித்தரிக்க காரணம் என்ன?  
யாராவது ஒரு கருத்தை சொன்னார்கள் என்றால், அவர்களை அர்பன் நக்சலைட்(நகர்ப்புற நக்சலைட்) என்று சொல்கிறது இந்த அரசாங்கம். எது பேசினாலும் அவர்களை ஆண்டி நேஷ்னல்( இறையான்மைக்கு எதிரானவர்கள்) என்று சொல்கிறது. இத்தனை வருடம் இல்லாத அளவுக்கு இவ்வளவு மோசமான ஒரு அரசியல் சூழல், வெறுப்பின் வழியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது சக மனிதர்கள் மீதும், இந்த நாட்டுமக்கள் மீதும் போர் தொடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

மத்திய அரசுக்கு எதிராக எழுத்தாளர்களே போர்க்கொடி தூக்கியது இந்தியாவிற்கு அவமானம் இல்லையா?  
நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த அரசுக்கு எதிராக வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்ேறாம். உலகம் முழுக்க இந்தியாவுக்கு மிகப்பெரிய மரியாதையை தரக்கூடிய எழுத்தாளர்கள் இவர்கள். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இப்படி வெளியிட்டிருப்பது என்பது உலக நாடுகளுக்கு முன்னாடி இந்த நாட்டினுடைய, இந்த ஆட்சியின் மீது பெரிய கோபத்தை உருவாக்கும். அவமானத்தை உருவாக்கும். இதை அவர்கள் மிகப்பெரிய அவமானமாக இதை நினைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : someone ,Salma ,BJP ,Narnaite , BJP, Urban Naxalite, writer Salma,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...