×

மீனவர்களுக்கான நலத்திட்டம்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி

சென்னை: மீனவர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் செய்யப்படும் என்று தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதியளித்துள்ளார்.தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ஜெயவர்தன் நேற்று காலை, இசிஆர், பாலவாக்கம், சென்னை மாநகராட்சி பள்ளி அருகில் 185, 192வது வட்டத்தில்  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி அங்குள்ள மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது  மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்,  பகுதி செயலாளர்கள் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.கந்தன், கிழக்கு பகுதி செயலாளர் லியோ. சுந்தரம்,  வட்ட செயலாளர்கள்  ராஜேந்திரன், கண்ணன், மேகநாதன்,  மற்றும் கபாலீஸ்வரன் மா.தனபால், எம்.சி.முனுசாமி,  பெரும்பாக்கம் ராஜசேகர்,  டி.சி கோவிந்தசாமி, என்.சி. கிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க ராம்குமார், தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. மோகன்ராஜா, த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன்,  சமத்துவ மக்கள் கட்சி பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ஜெகன், புரட்சிபாரதம் ஆதிவேந்தன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் பேசியதாவது: மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரை தொடர்ந்து வலியுறுத்தியதால், 85க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த பயிற்சிநிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டு வேலை கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வலியுறுத்தியும், தொடர்ந்து ரயில்வே அமைச்சரை வலியுறுத்தியும் கிண்டியில் ஏற்படும் நெரிசலை குறைக்க நடை பாதை மேம்பாலத்துக்கு நிதி பெறப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. மாம்பலம் புனித தோமையர் மலை, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை ரயில் முனையங்களிலும் புதிய நடைபாதை மேம்பாலம் மத்திய அரசின் நிதி பெற்று அமைக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கரணையில் புதிய பல்நோக்கு மருத்துவமனை ரூ.35 கோடி மதிப்பில் மத்திய அரசு மற்றும் முதல்வர் எடப்பாடியை தொடர்ந்து வலியுறுத்தியதால் அதற்கான முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஈஞ்சம்பாக்கத்தில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Welfare Scheme for Fishermen ,Jayawardene ,AIADMK , Welfare Scheme,r Fishermen, AIADMK candidate, Jayawardhan,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...