ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நாஞ்சில் சம்பத் பேசியது:முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவல்துறை உதவியுடன் பார்க்க முடியாத ஊருக்கெல்லாம் சென்று வருகிறார். அவரது வாழ்க்கையில் இன்றுதான் பிரசார வேனில் ஏறியுள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், ஆட்டோவில்கூட ஏறியிருக்க மாட்டார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஜெயலலிதா மரணம் மூலம் முதல்வராகும் சாத்தியம் ஏற்பட்டது. தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சேர்ந்து டெல்லியில் காவு கொடுத்துவிட்டனர்.
பிரதமர் நாற்காலியில் மோடியை இனிமேல் உட்கார வைக்கக்கூடாது. தமிழகத்துக்கு வரவேண்டிய ₹17 ஆயிரம் கோடி நிதி இன்னும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை. கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் ₹15 ஆயிரம் கோடி கேட்டும் இதுவரை கொடுக்கவில்லை. தமிழகம் ₹4.50 லட்சம் கோடி கடனுடன் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இதற்கு முழு காரணம் ஓபிஎஸ்தான்.பாமக கட்சியல்ல, கும்பலாகும். பாமக 7 தொகுதிகளிலும் மக்களால் தூக்கி வீசப்படும். தர்மபுரியில் அன்புமணியை காடுவெட்டி குரு குடும்பத்தினரே தோற்கடிப்பார்கள். விஜயகாந்த்தை பார்க்க வருபவர்களை பற்றி அவருக்கு யார், யாரென தெரியவில்லை. விஜயகாந்த்தை வைத்து பிரேமலதா, சுதீஷ் அரசியல் நடத்துகின்றனர்.தன்னை மோடி ஒரு ஏழையின் மகன் என்று கூறிக்கொண்டு தினமும் ₹10 லட்சம் செலவில் கோர்டு சூட் அணிகிறார். இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி