×

குருசுமலை திருப்பயணம் துவக்கம்: மலை உச்சியை நோக்கி ஜோதி பயணம்

அருமனை: குருசுமலை திருப்பயணம் நேற்று  கொடியேற்றத்துடன்  தொடங்கியது. அதனை தொடர்ந்து மலை உச்சியை நோக்கி ஜோதி பயணம் நடந்தது. விழாவை முன்னிட்டு காலை மலையடிவாரத்தில் சங்கீத ஜெபமாலை,  திருச்சிலுவைப்பாதை, விவிலிய பாராயணம், தொடர்ந்து நெய்யாற்றங்கரை ஆயர்  இல்லத்திலிருந்து குருசுமலை அடிவாரம் வரை திருப்பயண கொடி பவனி, இருசக்கர  வாகன பயணம் ஆகியவை நடந்தது. இது போன்று கடையாலுமூடு திருஇருதய  தேவாலயத்திலிருந்து குருசுமலை கொடி பவனி, வாகனப் பிரசார பயணம் நடந்தது.  தொடர்ந்து ஆனப்பாறையிலிருந்து குருசுமலை வரை கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலம்  நடந்தது. மாலை 3 மணிக்கு உலக அமைதி வேண்டியும், கின்னஸ் சாதனைக்காகவும்  வெள்ளறடையிலிருந்து 10 அடி நீளம், ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள கொடி பயணம்  நடந்தது. இதனை 300 இளைஞர்கள் எடுத்து சென்றனர்.

மாலை நெய்யாற்றங்கரை  பிஷப் வின்சென்ட் சாமுவேல் கொடியேற்றி திருப்பயணத்தை தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து மலை உச்சி நோக்கி ஜோதி பயணம் நடந்தது. பின்னர் கொல்லம் மறைமாவட்ட  பிஷப் பால் ஆன்றனி தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. இரவு  திருப்பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் பிஷப் வின்சென்ட் சாமுவேல் தலைமையில்  நடந்தது.  ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். குருசுமலைத்  திருத்தல டைரக்டர் வின்சென்ட் கே.பீட்டர் அறிமுக உரையாற்றினார். கேரள  அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்,  குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர்  ஜாண் தங்கம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன்,  கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் ஜாண்சன் உள்பட பலர் பேசினர். இரவு நடை  பெற்ற பெருவிழாவில் முன்னாள் அமைச்சர் சசிதரூர் பேசினார். 2ம்  நாள் முதல் நிறைவு நாளான ஏப்ரல் 7 வரை தினமும் காலை முதல் இரவு வரை மலையடி  வாரத்திலும், மலை உச்சியிலும் திருப்பலி, மறையுரை, ஜெப வழிபாடு,  சிலுவைப்பாதை, மாலையில் பொதுக்கூட்டம் ஆகியவை நடக்கிறது. ஏப்ரல் 3ம் தேதி  கருத்தரங்கம், 4ம் தேதி பொதுக்கூட்டம், 5ம் தேதி பட்டிமன்றம், 6ம் தேதி  பொதுக்கூட்டம், 7ம் தேதி மாலையில் கொடி இறக்கத்துடன் திருப்பயணம்  நிறைவடைகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kurusumalai Thirunavu Launch ,hill , Kurusumalai Thiruppigai, Mountain Hill, Jyoti Trip
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...