×

அரிமளம், திருமயம் பகுதியில் மரத்திலேயே கருகும் பூக்களால் முந்திரி உற்பத்தி கடும் பாதிப்பு

திருமயம்: கஜா புயலை தொடர்ந்து அரிமளம், திருமயம் பகுதியில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக முந்திரி பூக்கள் மரத்திலே கருகுவதால் முந்திரி பருப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமளம், திருமயம் உள்ள தைல மர காட்டுப்பகுதியில் ஆங்காங்கே அரசு சார்பில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் முந்திரி மரங்கள் நடவு செய்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது வறட்சியை தாங்கும் மரம் என்பதால் வறண்ட பகுதியிலும் நன்கு வளரக்கூடியது. பெரும்பாலும் முந்திரி மரங்கள் ஜனவரி, பிப்ரவரி மாதம் பூத்து காய்கள் காய்க்க தொடங்கும். இந்நிலையில் முந்திரி மரம் வளர அதிகளவு நீர் தேவையில்லை என்றாலும், பூக்கள் காய்களாக மாறி பழம் பழுக்க குளிர்ச்சியான வளிமண்டலம், வேர் பகுதியில் ஈரப்பதம் தேவைப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் வீசிய கஜா புயலில் அரிமளம் பகுதியில் உள்ள பெரும்பாலான முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் முறிந்த நிலையிலும் காணப்படுகிறது. இருந்த போதிலும் முந்திரி மரங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதியில் நன்கு வளர்ந்து பூக்க தொடங்கி உள்ளது. இதனிடையே அரிமளம் பகுதியில் முந்திரி பூக்க தொடங்கி ஒரு மாதம் ஆகியும் மழை பெய்யாததால் அப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் மரங்கள் வளர்வதற்கே போதிய நீர் இல்லாமல் ஒரு சில மரங்கள் கருகத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இரவு நேரங்களில் பனியும், பகலில் வெயிலும் சுட்டெரிப்பதால் பூக்கள் வெயில் வெப்பத்தில் கருகி கொட்டுகிறது. இதனால் முந்திரி பழங்கள் காய்ப்பது குறைந்து முந்திரி கொட்டைகள் மூலம் கிடைக்கும் பருப்பு உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arimalam ,area ,Thirumayam , Arimalam, tirumayam, cashew
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...